About the Koyil

கோயிலைப்பற்றி இருப்பிடம்:

தென்னிந்தியாவில், காஞ்சீபுர மாவட்டத்தில், செங்கல்பட்டிலிருந்து தெற்கே 10 கி.மீ தூரத்தில், பாலாற்றின் கிழக்குக் கரையில் பழைமை வாய்ந்த இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது. பாலாற்றின் மேற்குக்கரையில் திருமலைவையாவூர் என்றத்திருக்கோயிலும், வடமேற்குதிசையில் மையூர் என்றத்திருத்தலமும் அமைந்துள்ளது.

கேசவனின் அற்புதம்!
சுமார் 1940 யில்- மணப்பாக்கம் கிராமத்தில் பாலாற்றில் வெள்ளம் பெருகெடுத்து ஓடியது. கிராம மக்கள் செய்வதறியாது திகைத்து பீதியுடன் உடைமைகளை சுமந்து கொண்டு ஊரைவிட்டு செல்ல மெள்ள மெள்ள ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அசசமயம் அவ்வூரில் பல தலைமுறைகளாய் வசித்து வந்த அந்தணப் பெரியவர் ஒருவர், “எவரும் அச்சப்படவேண்டாம், இருப்பிடம் விட்டுப் போகவேண்டாம் எல்லாம் நம் கேசவன் பார்த்துக்கொள்வான். என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறி, அந்த தள்ளாத வயதிலும் கிராமவாசிகள் துணையுடன் ஊரின் உள்ளே வெள்ளம் வராதிருக்க கோயிலின் நுழைவாயிலின் முன் தடுப்பணை அமைத்தார்.

நடப்பது நடக்கட்டும் என்று அனைத்து மக்களும் ஒன்றுகூடி கேசவனது நாமத்தையே ஜபித்த வண்ணம் அந்த பெரியவரின் தலைமையில் கோயிலின் உள்ளே சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். என்னே! ஆச்சர்யம்! மடைதிறந்து வந்துகொண்டிருந்த வெள்ளம், சரியாக கோயிலின் வரப்புவரை வந்து, மெள்ள மெள்ள வேகம் குறைந்து வடிந்து கொண்டிருந்தது. ஆதிகேசவனின் சக்தியை உணர்த்த இந்த நிகழ்ச்சி ஒன்றே போதாதோ?
இதுபோல், வேண்டுவோர்க்கு வேண்டுவன அனைத்தும் அளித்து வரும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளிடத்தில் எந்த குறையாக இருந்தாலும் நெஞ்சாரப் பிரார்த்தனை செய்தால் கைமேல் பலன் கிடைப்பது நிச்சயம்.
இக்கோயிலைப்பற்றி தினமணி “வெள்ளிமணி” – செய்தித்தாளில் “மணப்பாக்கம் மாலவர்” என்ற தலைப்பிலும் ஏப்ரல் 2006 – “கோபுர தரிசனம்” மாத இதழிலும் விசேஷ செய்தியாக வெளிவந்துள்ளன


கோழியாலம் ஸ்வாமிகள் அவதாரஸ்தலம் /ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் விஜயம்.

image5

ஸ்ரீமத் ஸ்ரீரங்கராமானுஜ முநிசரணாம்போஜ ப்ருங்காயமாண
ஸ்ரீ மத்வேதாந்தராமானுஜ முநிகருணாவாப்த வேதாந்தயுக்மம்
தத்விந்யஸ்தாத்மரக்ஷா பரமநககுணம் ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீமத் ஸ்ரீரங்கராமானுஜமுநிமபரம் ஸம்ச்ரயே ஜ்ஞாநவார்திம்

image4

ஸ்ரீமத் கோழியாலம் ஸ்வாமி என்று ஸூப்ரஸித்தராக எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் ரங்கராமானுஜ மஹா தேசிகன் என்னும் யதிஷ்ரேஷ்டர் இந்த ஊரில் விஷூ பங்குனி அனுஷம் (மார்ச் 1882) அன்று அவதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image3

உலகப்பிரஸித்தி பெற்ற வைணவ மடாதிபதிகளான திருக்குடந்தை ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள், தற்போதைய ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் மற்றும் பல மடாதிபதிகள் இக்கோயிலுக்கு விஜயம் செய்து மங்களாசாஸனம் செய்துள்ளனர் என்பது சிறப்பு.


உற்சவங்கள்

சிறந்த வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு இத்திருக்கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் வருடப்பிறப்பு, ஆடியில் திருவாடிப்பூர விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் வேதாந்த தேசிகர் சாத்துமுறை, மார்கழியில் தனுர் மாச விழா மற்றும் விசேஷ லக்ஷார்ச்சனை என்று பல சிறப்பு பூஜைகள் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன.

கடந்த சில வருடங்களாய், நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் வருடாந்திர சிறப்புப்பூஜைகளை விஸ்தாரமாகவும் விமர்சையாகவும் நடத்த இயலாத நிலைமையில் இருந்தது. ஆயினும் சென்ற வருடத்திலிருந்து மறுபடியும் மிக சீரிய முறையில் இப்பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.


திருப்பணிக்குழு

இக்கோயிலின் கைங்கர்ய ஸபா திருப்பணிக்குழுவினர் அவ்வப்போது ஒன்று கூடி திருக்கோயிலின் நிர்மாணப் பணிகள் மற்றும் கோயிலின் வளர்ச்ச்சிபற்றி கலந்துரைக்கின்றனர். அதே போல் சென்ற வருடம் ஜூன் மாதம் 5-ம் தேதி அன்று நடைபெற்ற ஸபாவின் கூட்டத்தில் மீதமுள்ள சில முக்கிய திருப்பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது:

  • விமானம் கட்டுதல்
  • உற்சவ மூர்த்திகளை பாலாலயம் செய்து, ஸன்னதியை சீர்படுத்துதல்
  • அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் செய்தல், ஆகியவையாகும்

மேலும் விவரங்களுக்கு அணுகவும்:
திரு வி. ரங்கன் (பொருளாளர்)
ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் கைங்கர்ய ஸபா திருப்பணிக் கமிட்டி
எண்: 137/60, லஸ் சர்ச் ரோடு
மைலாப்பூர், சென்னை – 600 004.
தொலைபேசி எண்: +91 94444 20999

  • Sri.D.Rangaswamy (President):98414 81241
  • Sri.S.Sriramapichai (Secretary):94442 05290


E-Mail :aadhikesavaperumal@gmail.com


Media release