
அன்புடையீர், திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மஹாஸம்ரோக்ஷணம் 27.04.2007 நடைபெற்றது. அதன்பிறகு எல்லோருடைய நல் ஆதரவினாலும் வருஷா வருஷம் பவித்ரோத்ஸவம், நவராத்திரி, அன்னக்கூடை, தனுர்மாத ஆராதனை, தவன உத்ஸவம், சுதர்ஸன ஹோமம், மாத ஸ்ரவண உத்ஸவங்கள் இனிதே நடைபெற்று வருகின்றது.
மேலும் எம்பெருமானின் அனுக்கிரஹத்தினாலும் பக்த/பாகவத சியேஷ்டர்களின் விக்ஞாபித்தபடி தாயார் ஸன்னதி கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த பெருமழையினால் திருமடப்பள்ளி பழுதடைந்துவிட்டபடியால் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளதால் அக்கட்டிடத்தை புதுப்பிக்கவும், வெளியிலிருந்து வரும் ஸேவார்த்திகள், உபயதாரர்கள் வந்து தங்கினால் அவர்களுக்கு தங்க இடமும், குளியல் அறை மற்றும் கழிவறையும் கட்டிமுடிப்பதற்கு பெரும் நிதி தேவைப்படுகின்றது. மேற்கூறிய பணிகளுக்கு சுமார் ரூ.15 லட்சம் தேவைப்படும் என்று பொறியாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை மனதிற்கொண்டு மேற்படி தாயார் சன்னதி மற்றும் மடப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பக்தகோடிகள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தாராளமாக பொருள் உதவியோ பண உதவியோ செய்து இத்திருப்பணி செவ்வனே நடந்தேறிட உதவிசெய்யுமாறு அன்புடன் ப்ரார்த்திக்கிறோம்.
வங்கி காசோலை ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கைங்கர்ய சபா என்ற பெயரில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கைங்கர்ய சபா
137/60, லஸ் சர்ச் சாலை, மைலாப்பூர், சென்னை – 600 004
Contact: Mr.M.S.Rajagopalan – 044 24994503 or Mr.D.Rangaswamy – 98414 81241
மேலும் எங்கள் வங்கி கணக்கில் நேரிடையாகவும் செலுத்தலாம்.
வங்கி விவரம்: ஆந்திரா வங்கி, மௌபரிஸ் ரோடு கிளை,
A/C No. 025510011011266
IFSC: ANDB0000255 / MICR No. 600011015
மேலும் விவரங்கள் இங்கே.