Sarva Roga Nivaraka Sri Surya Satakam

We are happy to make available here for free, an audiobook of Sarva Roga Nivaraka Sri Surya Satakam, rendered by Navaratnamala Sri M.K.Venkataraman. You can listen and benefit from hearing the rendering of all 7 tracks for Sapthaha Patana Sravanam for the 7 Days of the week speaker

You can download the MP3 files for free direct from Google Drive here

Sarva_Roga_Nivaraka

”நவரத்னமாலா” எம்.கே.வெங்கடராமன்,எம்.ஏ.,

இந்நூலாசியர் தீவிர சிவ விஷ்ணு பக்தர். ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மீது தீவிர ஈடுபாடு உடையவர்.பல உதவிகளை செய்தவர். எனவே தான் அவரது ஒலிநாடாவை இலவசமாக திருக்கோயிலின் இணைய தளத்தில் சேர்த்துள்ளளோம். சேர்க்க அனுமதி அளித்த கோயில் நிர்வாகிகளுக்கு நன்றி பல.


ஸர்வ ரோக நிவாரக ஸ்ரீ ஸூர்ய சதகம்.

ஸ்ரீ மயூரகவி இயற்றிய ஸ்ரீ ஸூர்ய சதகத்திற்கு விளக்கவுரை அளித்த ஸ்ரீ எம்.கே.வெங்கடராமன் அவர்கள் தேர்ச்சி பெற்ற ஸம்ஸ்க்ருத பண்டிதர்.நல்ல புலமை பெற்றவர். இவர் பல ஆன்மிக வகுப்புகளை நடத்தி ப்ரவசனம் செய்து வருபவர். இவர் பல நூல்களுக்கு ஸங்க்ரஹங்களையும் தமிழாக்கங்களையும் விளக்கவுரைகளையும் இயற்றி வருகிறார்.

மும்மூர்த்திகளின் ஸ்வரூபமான ஸ்ரீ ஸூர்ய பகவான்,அனைவருக்கும் ப்ரத்யக்ஷமான தெய்வம்.மனிதர்கள் மட்டும் அல்லாத எல்லா ஜீவராசிகளுக்கும் ஸூர்யனின் ஸான்னித்யம் அத்யாவசியமாகிறது. ஸ்ரீ காயத்ரி மஹா மந்த்ரத்திற்கு ஸ்ரீ ஸூர்ய பகவானே முக்கிய உபாஸனா தெய்வம்.

SriSuryaSatakam2

ஸ்ரீ ஸூர்ய பகவானைப் பற்றி ப்ரஸித்தமான “ஆதித்ய ஹ்ருதயம்” உட்பட அநேக ஸ்தோத்ரங்கள் இருக்கின்றன. இருப்பினும் ஸ்ரீ மயூரகவியால் இயற்றப்பட்ட ஸூர்ய சதகம் தனித்தன்மை வாய்ந்தது. பல வியாதிகளுக்கு நிவாரணமாக இச்சதகம் பயன்பட்டிருக்கிறது. நடமாடும் தெய்வமாக விளங்கிய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ பரமாச்சார்யாள் இச்சதகத்தை பாராயணம் செய்ய பரிவுரை செய்திருக்கிறார்கள் என்பது இந்நூலுக்கு மேலும் சிறப்பு.

இந்நூலை பிரபல ஆன்மிக நூல் வெளியீட்டாளர்களான ”லிப்கோ” பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தனது வயதையும் பொருட்படுத்தாது, விளக்கவுரை ஆசிரியர், எம்.கே.வெங்கடராமன் அவர்கள் நூறு சதகங்களையும் சிரத்தையோடு சொல்லி,ஒலிநாடா வடிவில் வெளியிட்டுள்ளார்.

இந்நூலை வாசிப்பவர்களுக்கும், இச்சதகத்தை செவிபட கேட்டு பரவசப்பட்டவர்களுக்கும், மூலக்ரந்தகர்த்தா ஸ்ரீ மயூரகவி கூறியபடி, திடமான தேக ஆரோக்கியம்,கவிதாசக்தி, நற்புத்தி, நீண்ட ஆயுள், நீங்காத செல்வம் முதலான அனைத்து ஸ்ரேயஸ்ஸுகளும் கிட்டும் என்பது திண்ணம்.